திருமணமான ஒரு வருடத்தில் பிரபல நடிகையின் கணவர் திடீர் மரணம்... சோகத்தில் ரசிகர்கள்
பிரபல சீரியல் நடிகையான ஸ்ருதி ஷண்முகபிரியாவின் கணவர் அரவிந்த் சேகர் திடீரென உயிரிழந்துள்ளது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை ஸ்ருதி
சின்னத்திரையில் நாதஸ்வரம் சீரியல் மூலம் அறிமுகமான ஸ்ருதி, அடுத்தடுத்து வாணி ராணி, கல்யாண பரிசு, பாரதி கண்ணம்மா போன்ற சீரியலில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தினால் கல்லூரி படிக்கும்போதே நடிப்பிற்கு வந்த இவர், வெள்ளித்திரையிலும் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவர் கடந்த ஆண்டு மிஸ்டர் தமிழ்நாடு 2022 என்ற போட்டியில் கலந்து கொண்டு இரண்டாவது பரிசை வென்ற அரவிந்த் சேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களின் திருமணம் இருவீட்டாரின் சம்மதத்துடன் அரங்கேறியுள்ள நிலையில், திருமணத்திற்கு பின்பு சீரியலிலிருந்து விலகி குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகின்றார்.
தற்போது இவருக்கு திருமணமாகி ஒரு வருடம் மட்டுமே ஆன நிலையில், ஸ்ருதியின் கணவர் அரவிந்த் சேகர் திடீர் நெஞ்சுவலி காரணமாக சிகிச்சை ஏதும் அளிக்கப்படாமல் உயிரிழந்தார்.
அரவிந்த் சேகருக்கு வெறும் 30 வயதே ஆகியுள்ள நிலையில், இவரது இழப்பு பலருக்கு பேரதிர்ச்சியாக உள்ள நிலையில், நடிகை ஸ்ருதிக்கு பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |