திருமணமான ஒரு வருடத்திலேயே உயிரிழந்த கணவர்... பிரபல நடிகையின் உருக்கமான பதிவு
பிரபல சீரியல் நடிகை கணவர் மறைந்த பின்பு தனது இரண்டாவது திருமண நாளில் உருக்கமான பதிவு ஒன்றினை வெளியிட்டு சோகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா
பிரபல ரிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா, நாதஸ்வரம், வாணி ராணி சீரியல்களில் நடித்தவர் தான் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா.
இவர் அரவிந்த் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திடீரென அரவிந்த் மாரடைப்பால் காலமானார்.
திருமணமான ஒரு வருடத்தில் கணவர் மாரடைப்பினால் உயிரிழந்தது ஸ்ருதிக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.
இந்நிலையில், சமீபத்தில் அவர் தனது இரண்டாவது திருமண நாளை முன்னிட்டு உருக்கமான பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
சோகமான பதிவு
அவர் வெளியிட்ட இன்ஸ்டா பதிவில், நீ இல்லாமல் ஒரு திருமண நாளை கொண்டாடிக் கொண்டிருக்கிறேன், நீ என் அருகில் இருப்பதாக தான் நான் நினைக்கிறேன்.
இந்த உலகம் என்னை தடுக்க முடியாது, முன்பை விட நான் இப்போது உன்னை அதிகம் நேசிக்கிறேன், நீ இல்லாமல் நான் திருமண நாளை கொண்டாடுவதாக உலகம் நினைக்கலாம், ஆனால் நீ எப்போதுமே என் அருகில் தான் இருக்கிறாய்.
நான் அழுதால் உனக்கு பிடிக்காது என்பதால் தான் நான் அழுவது இல்லை, இந்த நாளில் உனக்கு பிடித்த சில விஷயங்களை செய்ய போகிறேன், நாம் வாழ ஆசைப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து காட்டி உன்னை பெருமைப்படுத்துவேன், உன்னை சந்திக்க வாழ்வின் இன்னொரு பக்கத்தில் காத்திருக்கிறேன்’ என்று உருக்கமாக பதிவு செய்துள்ளார்.
இந்த பதிவுக்கு ஆறுதல் கூறும் வகையில் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |