நடிகை ஸ்ருதிஹாசனா இது? புகைப்படத்தை பார்த்து முகம் சுழிச்சிடாதீங்க
நடிகை ஸ்ருதிஹாசன் சிறுவயதில் மாடலிங் துறையில் எடுத்த புகைப்படத்தினை வெளியிட்டுள்ள நிலையில் ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
கமல்ஹாசன் மற்றும் நடிகை சரிகா ஆகியோரின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் பாடகர், இசையமைப்பாளர் மற்றும் நடிகை என சினிமா சார்ந்த பல்வேறு துறைகளில் தன் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
சென்னையில் பள்ளிப் படிப்பினையும், மும்பையில் கல்லூரி படிப்பினையும் முடித்த இவர், அமெரிக்காவில் இசைக்கல்லூரியில் இசை கற்றுள்ளார்.
பாடகர், இசையமைப்பாளர், நடிகை என பன்முகம் கொண்ட இவர் அவ்வப்போது சோசியல் மீடியாவில் ஆர்வத்துடன் புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றார்.
ஸ்ருதிஹாசனும், டெல்லியை சேர்ந்த டூடுல் கலைஞரான சாந்தனு ஹசாரிகாவும் காதலித்து வருகிறார்கள். மும்பையில் லிவ் இன் முறைப்படி வசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்ருதிஹாசன் 17 வயதில் மாடலிங் செய்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
இது ஸ்ருதிஹாசன் தானா என்று கேள்வி எழுப்பும் வகையில் அடையாளமே தெரியாமல் அந்த புகைப்படத்தில் காட்சியளித்தார் ஸ்ருதிஹாசன்.