41 வயதிலும் தங்க நிற உடையில் ஜொலிக்கும் நடிகை
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை ஸ்ரேயா சரண்.
இயக்குனர் ஜோதி கிருஷ்ணாவின் எனக்கு 20 உனக்கு 18 படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார். இதில் திரிஷா முதன்மை கதாநாயகியாக நடிக்க ஸ்ரேயா இரண்டாவது ஹீரோயினாக நடித்திருப்பார்.
இதனைத்தொடர்ந்து, தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடித்த மழை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
இரண்டாவது படமாக திருவிளையாடல் ஆரம்பத்தில் நடிகர் தனுசுடன் ஜோடி சேர்ந்தார். மூன்றாவது படத்திலேயே, இயக்குனர் ஷங்கர் இயக்கிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சிவாஜி படத்தில் ஹீரோயினாக நடித்தார்.
பின்னர் விஜயுடன் அழகிய தமிழ் மகன், விஷாலுடன் தோரணை, விக்ரமுடன் கந்தசாமி, தனுஷுடன் குட்டி, சரத்குமாருடன் ஜக்குபாய், ஜீவாவுடன் ரௌத்திரம், ஆர்யாவுடன் சிக்கு புக்கு, சிம்புவுடன் அன்பானவன் அடங்காதவன் அசராதவன் என பல ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்தார்.
ஆனால் நடிகர் வடிவேலு ஹீரோவாக நடித்த இந்திரலோகத்தில் நா.அழகப்பன் படத்தில் ஒரு பாடலுக்கு ஸ்ரேயா நடனமாடியிருந்தார்.
இதுவே அவரது கேரியரை தலைகீழாக திருப்ப காரணமாக மாறியது. அதன் பின்னர் ஸ்ரேயாவுக்கு தமிழில் வாய்ப்புகள் குறைய தொடங்கியது.
கடைசியாக 2017 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் நடித்த ஸ்ரேயா அதன் பின்னர் தமிழ் சினிமா பக்கம் வரவே இல்லை.
2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட ஸ்ரேயாவுக்கு ஒரு குழந்தை உள்ளது. தற்போது ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என பிற மொழிகளில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை ஸ்ரேயா தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த தங்க நிற உடையில் இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.