வயிற்றில் குழந்தையோடு இருந்த ஸ்ரேயாவா இது? உச்சக்கட்ட கவர்ச்சியில் ஒல்லியாக மாறிய புகைப்படம்
நடிகை ஸ்ரேயா சரண் தன்னுடைய கர்ப்பகால புகைப்படத்தையும், சமீபத்திய புகைப்படத்தையும் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.
நடிகை ஸ்ரேயா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ஸ்ரேயா. இவர் ஆரம்பத்தில் குணச்சித்திர நடிகையாக நடித்து, பின்பு ஜெயம் ரவி படமான மழை படத்தில் ஹீரோயினாக நடித்தார்.
அதன் பின்பு பல முன்னணி நடிகர்களுடன் நடித்த ஸ்ரேயாவிற்கு, தனது 30 வயதை கடந்த பின்பு பட வாய்ப்புகள் குறையத் தொடங்கியது. உடனே தனது நீண்ட நாள் காதலரான ஆண்ட்ரூ என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டிலானார்.
இந்த தம்பதிகளுக்கு கடந்த 2021ம் ஆண்டு கொரோனா காலத்தில் பெண்குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை பிறந்து பல மாதங்களுக்கு பின்பே வெளியுலகிற்கு அறிவித்தார்.
தன்னுடைய மகளுக்கு ராதா என பெயரிட்டுள்ள ஸ்ரேயா, குழந்தை பெற்ற பிறகும் ஹீரோயினாக நடித்து வருகின்றனர். இந்நிலையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.
ஆம் ஸ்ரேயா, தன்னுடைய கர்ப்ப காலத்தில் போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும், தற்போதைய லேட்டஸ்ட் புகைப்படத்தையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை வியக்க வைத்துள்ளார்.
காரணம் கர்ப்பமாக இருக்கும் போது, கொழுக்க மொழுக்குன்னு இருந்த ஸ்ரேயா, தற்போது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மிகவும் ஒல்லியாக மாறியுள்ளார்.
இவரது இந்த ஒரு மாற்றம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியதோடு, ரசிகர்களால் லைக்ஸையும் குவித்து வருகின்றது.