சாமி கும்பிட வந்துட்டு முத்தம் கொடுப்பீங்களா? நடிகை ஸ்ரேயாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு
தென்னிந்திய சினிமாவின் கனவுக்கன்னியாக வலம் வந்த ஸ்ரேயா, கணவருடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.
2001ம் ஆண்டு இஷ்டம் திரைப்படத்தின் மூலம் திரைப்பயணத்தை தொடங்கி, தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகியாக வலம்வந்தவர் ஸ்ரேயா.
2018 ஆம் ஆண்டு ஆண்ட்ரூ என்ற ரஷ்ய டென்னிஸ் வீரரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
பின்னர் திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டார். நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் தனது திரையுலக பயணத்தை தொடங்கியுள்ளார்.
இந்நிலையில் ஸ்ரேயா தனது 39வது பிறந்தநாளை கடந்த வாரம் கொண்டாடினார், இதற்கிடையே, தன் கணவருடன் திருப்பதி கோயிலுக்கு தரிசனம் செய்தபோது எடுத்த புகைப்படம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, கோவில் வாசலில் ஸ்ரேயாவுக்கு அவரது கணவர் முத்தமிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கோவிலுக்கு சாமி கும்பிட வரும் போது இந்த மாதிரியெல்லாம் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா என பலரும் விமர்சித்து வருகின்றனர்.

