பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் அதிரடி கைது- அதிர்ச்சியில் ரசிகர்கள்
தமிழ் சினிமாவில், மிஸ்டர் ரோமியோ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை ஷில்பா ஷெட்டி. பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையும் ஆவார்.
இவரது கணவர், தொழிலதிபர் ராஜ் குந்த்ரா. இவர் பிரிட்டன் தலைநகர் லண்டனைச் சேர்ந்தவர். இதையடுத்து, ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவை, ஆபாச படங்களை தயாரித்த வழக்கில், மும்பை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
மேலும், இதுகுறித்து, நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும், தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா, மும்பையில் ஆபாச படங்களைத் தயாரித்து, அவற்றை சில மொபைல் போன் ஆப்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.
அதற்கான அனைத்து ஆதாரங்களும் காவல் துறையிடம் உள்ளன. ராஜ் குந்த்ரா மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருப்பதால், அவரை கைது செய்துள்ளோம். மேலும் இது தொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளனர்.
#WATCH | Actress Shilpa Shetty's husband & businessman Raj Kundra appeared before the Property Cell of Mumbai Police's Crime Branch, where he was arrested in a case relating to 'creation of pornographic films & publishing them through some apps' pic.twitter.com/mtlM4pYCc3
— ANI (@ANI) July 19, 2021