பிரபல நடிகையின் கணவர் திடீர் கைது: இரண்டு குழந்தைகளின் தந்தை செய்ற காரியமா இது?
பிரபல பாலிவுட் நடிகையின் கணவர் பொலிசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகையும், மாடலுமாக இருப்பவர் ஷில்பா ஷெட்டி. பாஜிகர் திரைப்படத்தில் அறிமுகமாகி பாலிவுட், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட ஆகிய மொழிகளில் நடித்து கொடிக்கட்டி பறந்தவர்.
தமிழில் குஷி, மிஸ்டர் ரோமியோ ஆகிய தமிழ் திரைப்படங்களிலும் நடித்து புகழ் பெற்றுள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு தொழிலதிபர் ராஜ் குந்த்ராவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு வியான், சமீசா ஷெட்டி என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஷில்பா, உடற்பயிற்சியில் ஆர்வம் கொண்டவர் ஆவார்.
இந்நிலையில் நடிகை ஷில்பா ஷெட்டி கணவர் ராஜ் குந்த்ராவை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
அவர் ஆபாச செயலிகளை உருவாக்கி அதை பயன்பாட்டிற்கு விட்டிருந்ததாகவும், அதில் இவர்தான் முக்கிய குற்றவாளி என்றும் கூறப்படுகிறது. ராஜ் குந்த்ரா கைது பாலிவுட் வட்டாரத்தில் பெரிய பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
