2 டோஸ் தடுப்பூசி போட்டும் கொரோனாவில் சிக்கிய பிக்பாஸ் ஷெரின் - அவரே வெளியிட்ட ஷாக் வீடியோ!
தமிழ் சினிமாவில் விசில் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஷெரின். இவர், கோவில்பட்டி வீரலட்சுமி, உற்சாகம், பீமா மற்றும் பூவா தலையா படங்கள் நடித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான ஷெரின் சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக புகைப்படம் வீடியோகளை பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில், நடிகை ஷெரினுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ளும்படி அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், தற்போது லேசான பாதிப்பு மட்டுமே இருப்பதாகவும், விரைவில் நலம் பெறுவேன் எனவும் ஷெரின் கூறியுள்ளார். தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை ஷெரின் ஏற்கனவே இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
இதனிடையே, தைரியமாக இருங்கள். அது தான் இந்த நேரத்தில் முக்கியம் உங்களுக்காக நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம் என தெரிவித்துள்ளனர்.