தவறான பரிசோதனையா? பிக்பாஸ் நடிகை ஷெரினுக்கு ஏற்பட்ட கொரோனாவிற்கு அதிர்ச்சி விளக்கம்!
பிக்பாஸ் நிகழ்ச்சி நடிகை ஷெரின், சமீபத்தில் தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, தற்போது தன்னுடைய பரிசோதனை முடிவு தவறாக வந்திருக்கலாம் என, மருத்துவர் தெரிவித்ததாக கூறியுள்ளார்.
இந்த தகவல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இன்ஸ்டாகிரம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளதாவது, தன்னுடைய முதல் பரிசோதனை 16 ஆம் தேதி செய்யப்பட்ட போது பாசிட்டிவ் என வந்ததாகவும், அதை தொடர்ந்து மீண்டும் 17 ஆம் தேதி கொரோனா பரிசோதனை செய்த போது, நெகடிவ் என வந்தது... இன்றும் எனக்கு நெகடிவ் என வந்துள்ளது.
எனவே தன்னுடைய மருத்துவர் முதல் பரிசோதனை தவறாக வந்திருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளார். மேலும், நான் தனிமையில் தான் இருக்கிறேன், நலமுடன் உள்ளேன்... உங்கள் அனைவரின் அன்புக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.