மதுவிற்கு அடிமையான பிரபல நடிகையின் மகன்! தந்தை மற்றும் சகோதரியை கொலை செய்த அதிர்ச்சி
பிரபல துணை நடிகையான சாந்தி என்பவரின் மகன் மதுபோதைக்கு அடிமையாகிய நிலையில், திடீரென தந்தை மற்றும் தனது சகோதரியை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துணை நடிகை சாந்தி
சென்னை மாங்காடு அருகே தமிழ் சினிமா துணை நடிகை சாந்தி, கணவருடன் வசித்து வந்தார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ள நிலையில், மகளுக்கும், மூத்த மகனுக்கும் திருமணமாகி வெளியே தனியாக வசித்து வருகின்றனர்.
டப்பிங் கலைஞரான கடைசி மகன் பிரகாஷ் மட்டும் தாய் சாந்தியுடன் வசித்து வந்துள்ளார். மேலும் டப்பிங்க வேலையில் கிடைக்கும் பணத்தினை உடனே மது அருந்து செலவு செய்து விடுவாராம்.
மேலும், தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை எடுத்து வந்த நிலையில், சில நாட்கள் குணமாகிய நிலையில், மீண்டும் மதுவிற்கு அடிமையாகியுள்ளார்.
இதனால் குடும்பத்தினர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்ப்பதற்கு ஏற்பாடு செய்துள்ள நிலையில் இதனை மறைந்திருந்து கேட்ட பிரகாஷ் தந்தை மற்றும் தாய் மற்றும் சகோதுரி மீது கோபம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ் தந்தையையும், சகோதரியையும் கத்தியால் குத்தி கொலை செய்து தப்பியோடியுள்ளார். தகவலறிந்து வந்த போலீசார் சடலங்களை மீட்டு, தப்பியோடிய பிரகாஷை கைது செய்தனர்.