அஜீத்தின் மச்சினிச்சியா இது? எலும்பும் தோலுமாக வெளியிட்ட புகைப்படம்
நடிகை பேபி சாமிலி உடல் எடை குறைந்து எலும்பும், தோலுமாக இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளது அதிர வைத்துள்ளது.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பேபி சாமிலி, தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார்.
1990-இல் அஞ்சலி என்ற படத்தில் மனநலம் குன்றிய குழந்தையாக நடித்து நேஷனல் பிலிம் விருதுகளை தட்டிச் சென்றார். அதன் பின்பு பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பேபி சாமிலி என்ற பெயரைப் பெற்றார்.
பின்பு சரியாக திரைப்படம் கிடைக்காமல் தற்போது ஒதுங்கியிருக்கும் இவர் அவ்வப்போது சொக்க வைக்கும் சொப்பன சுந்தரியாக புகைப்படங்களை தனது சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றார்.
இந்நிலையில் திடீரென தன்னுடைய உடல் எடையை மொத்தமும் குறைத்து எலும்பும் தோலுமாக அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துவிட்டனர்.
ஏற்கனவே ஷாமிலி முகம் வயதை விட கொஞ்சம் முதிர்ச்சியடைந்து காணப்படுவதால் தான் அவருக்கு வாய்ப்பு வருவதில்லை என கோலிவுட்டில் பரவலாக பேச்சுகள் உள்ள நிலையில் தற்போது உடல் எடையை குறைத்துள்ளது மேலும் அவரது சினிமா கேரியருக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளதாம்.