நடிகை ஷாலினியின் அம்மாவா இது? குடும்பமே எவ்வளவு இளமையா இருக்காங்கனு பாருங்க...
நடிகர் அஜித்குமாரின் மனைவி ஷாலினி தன்னுடைய தாயின் பிறந்தநாளன்று வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை ஷாலினி
தமிழ் சினிமாவில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான காதலுக்கு மரியாதை படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை ஷாலினி.
நடிகர் விஜய்க்கு ஜோடியாக அவர் நடித்த இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதை அடுத்து நடிகை ஷாலினிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. இவர் தமிழைக் காட்டிலும் மலையாளத்தில் தான் அதிக படத்தில் நடித்துள்ளார்.
தமிழில் வெறும் ஐந்து படங்களில் மட்டுமே நடித்த ஷாலினி அத்துடன் சினிமாவை விட்டு விலகிவிட்டார்.
அதில் அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் எதுவென்னால் கடந்த 1999ம் ஆண்டு வெளியான அமர்க்களம் தான்.
இப்படத்தில் நடிக்கும் அஜித் ஷாலினி இருவருக்கும் காதல் மலர்ந்த நிலையில், பின்பு திருமணமும் செய்து கொண்டனர்.
திருமணத்துக்கு பின்பு அலைபாயுதே மற்றும் பிரியாத வரம் வேண்டும் ஆகிய இரண்டு படங்களில் மட்டும் நடித்த ஷாலினி, அதன் பின்பு சினிமாவிலிருந்து ஒதுங்கினார்.
நடிகை ஷாலினிக்கு ரிச்சர்டு ரிஷி என்கிற சகோதரரும், ஷாமிலி என்கிற தங்கையும் உள்ளனர். இவர்களும் சினிமாவில் நடித்துள்ளனர்.
வைரலாகும் குடும்ப புகைப்படம்
இந்நிலையில், நடிகை ஷாலினி அவரது தங்கை ஷாமிலி மற்றும் சகோதரர் ரிச்சர்டு ரிஷி உடன் சேர்ந்து தனது தாயாரின் பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார்.
அப்போது தாயாருடன் குடும்பமாக எடுத்த புகைப்படம் ஒன்றையும், முன்பு எடுத்த பழைய புகைப்படம் ஒன்றையும் ஒப்பிட்டு பதிவு ஒன்றினை போட்டுள்ளனர்.
இதில் நடிகை ஷாலினியின் தாயார் உள்பட அனைவருமே குறையாத இளைமையுடன் அப்படியே இருப்பதை பார்த்த நெட்டிசன்கள் உங்க குடும்பத்திற்கே வயதாகாதா என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |