நடிகை நயன்தாராவுடன் அனிதா விஜயகுமார்! உங்களுக்கு வயதே ஆகாதா? வைரல் புகைப்படம்
நடிகர் விஜயகுமாரின் மகள் அனிதாவும், நடிகை நயன்தாராவும் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகின்றது.
அனிதா விஜயகுமார்
தமிழ் சினிமாவில் முன்னணியில் இருந்தவர் நடிகர் விஜயகுமார். இவரது முதல் மனைவிக்கு கவிதா, அனிதா மற்றும் அருண் விஜய் என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
இரண்டாவது மனைவி மஞ்சுளாவுக்கு வனிதா, ஸ்ரீதேவி, பிரீத்தா என்று மூன்று மகள் உள்ளனர். இதில் இரண்டாவது மகள் அனிதா விஜயகுமார் டாக்டருக்கு படித்தவர். இவரது மகள் தியாவுக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்து விட்டாலும் திருமண கொண்டாட்டங்கள் இன்னும் ஓயவில்லை. அனிதா விஜயகுமார் சமீபத்தில் தனது மகளின் திருமணத்திற்காக உழைத்த உறவினர்களுக்கு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ராஜ விருந்து அளித்தார்.
இந்த நிலையில் இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் திருமணம் நேற்று நடைபெற்றது. அதில் தந்தை விஜயகுமார், மகள்கள் அனிதா விஜயகுமார், பிரீதா, ஸ்ரீதேவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அனிதா அங்கு தன்னுடைய தந்தை மற்றும் தன்னுடைய சகோதரி பிரீத்தா, நடிகை நயன்தாரா, தன்னுடைய மகன் மற்றும் நடிகை நளினி போன்றவர்களோடு எடுத்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |