Actress Shalini: நடிகை ஷாலினியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினியின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நடிகை ஷாலினி
குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்பு 1997ம் ஆண்டு மலையாள திரைப்படமான அனியாதி பிராவு திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
பின்பு தமிழில் காதலுக்கு மரியாதை படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். சரண் இயக்கிய அமர்களம் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்தார்.
இப்படத்தில் நடித்தபோது தான் அஜித்தும் ஷாலினியும் காதலிக்க தொடங்கினர். இப்படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் மோதலில் தொடங்கிய இவர்களின் சந்திப்பு பின்பு காதலாக மாறியுள்ளது.
2000ம் ஆண்டு அஜித்தை திருமணம் செய்த இவர் பின்பு பிரசாந்திற்கு ஜோடியாக பிரியாத வரம் வேண்டும் என்ற ஒரே ஒரு படத்தில் நடித்து சினிமாவை விட்டுச் சென்றார்.
பின்பு 2008ம் ஆண்டு அனோஷ்கா என்ற பெண் குழந்தையும், 2015ம் ஆண்டு ஆத்விக் என்ற ஆண் குழந்தையும் பிறந்தது. தற்போது குழந்தைகளை மட்டும் கவனித்துக் கொண்டு வருகின்றார்.
ஷாலினியின் சொத்து மதிப்பு
சினிமாவை விட்டு விலகினாலும் தற்போது கோடீஸ்வரியாகவே வாழும் இவரது சொத்து மதிப்பு வெளியாகியுள்ளது.
ஆம் நடிகை ஷாலினியின் சொத்து மதிப்பு ரூ.50 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் அஜித் - ஷாலினி ஜோடியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.300 கோடிக்கு மேல் இருக்குமாம்.
ஷாலினி தனது கடைசி படத்திற்கு ரூ.50 லட்சம் சம்பளம் வாங்கியுள்ளார். ஆனால் இன்று அவர் நடிக்க சம்மதம் கூறினால் கோடி ரூபாய் கூட தயாரிப்பாளர்கள் சம்பளம் கொடுப்பார்கள் என்று கூறப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |