சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கிறாரா நடிகை ஷாலினி... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
நடிகை ஷாலினி மீண்டும் சினிமாவிற்குள் ரீ எண்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
நடிகை ஷாலினி, அஜீத்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம்வரும் நடிகர் அஜித், மக்கள் மனதில் தனி இடத்தினை பிடித்துள்ளார். இவர் அமர்களம் படத்தில் நடிக்கும் போது ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிகளுக்கு ஆத்விக், அனௌஷ்கா என இரண்டு குழந்தைகள் உள்ளனர். சினிமாவில் நடிப்பதை தாண்டி தற்போது கார் ரேஸில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார்.
இவரது அடுத்த படமான AK64 வெளிவருமா? இல்லையா? என்று எழுந்து வரும் நிலையில், தற்போது ரசிகர்களுக்கு குஷியான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித் என்னதான் தன்னுடைய வேலையில் பிஸியாக இருந்தாலும், குடும்பத்துடன் நேரம் செலவிடுவதை மட்டும் தவறுவதே கிடையாது.
தற்போது அஜித்தின் மனைவியும், நடிகையுமான ஷாலினி மீண்டும் சினிமாவிற்குள் ரீ எண்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஷாலினி ரீ எண்ட்ரியா?
இன்றைய தம்பதிகளுக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்துவரும் இந்த நட்சத்திர தம்பதிகள் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டும் வருகின்றனர்.
இந்நிலையில் திருமணத்திற்கு பின்பு ஷாலினி சினிமாவில் இருந்து விலகியிருந்த நிலையில், தற்போது ரீ எண்ட்ரி கொடுக்க உள்ளாராம்.
அதாவது அஜித் தனது அடுத்த படத்தினை தயாரிப்பதற்கு முடிவெடுத்துள்ளதாகவும், நடிப்பில் பிஸியாக இருப்பதால் முழு கவனத்தை தயாரிப்பு பணிகளில் செலுத்த முடியாது என்பதால், தயாரிப்பு பணியில் ஷாலினியை கவனம் செலுத்த கேட்டுள்ளாராம்.
அஜித்திற்கு ஷாலினி சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வராத நிலையில், விரைவில் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |