இப்ப எங்க போனார் உங்க கணவர்...? பிக்பாஸ் டாஸ்கில் விசித்ரா சொன்ன கதைக்கு பதிலடி கொடுத்த ஷகிலா
நடிகை ஷகிலா, விசித்ராவின் சொன்ன கதை குறித்து தன்னுடைய விமர்சனத்தை பிரபல சேனலுக்கு அண்மையில் கொடுத்த பேட்டியில் பகிர்ந்துள்ளார் இது தற்போது இணையத்தில் பேசு பொருளாக மாறியிருக்கின்றது.
ஷகிலாவின் பேட்டி
இது குறித்து ஷகிலா பேசும் போது, “விசித்திரா போன்ற ஒரு வலிமையான போட்டியாளரை நீங்கள் இதுவரை பிக் பாஸில் பார்த்திருப்பீர்களா என்பது எனக்கு தெரியவில்லை.
அப்படி இருக்கும் பொழுது, அவர் எப்படியான பிரச்சினைகளுக்கு ஆளாகி இருப்பார் என்று நீங்கள் நம்புகிறீர்கள்? விசித்ரா ரவீனாவிடம் ஒரு விடயம் பற்றி குறிப்பிட்டார்.
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் ஒரு பெண், அந்த காயத்தோடு தான் காவல் நிலையத்திற்கு செல்ல வேண்டும் என்று சொன்னார். காரணம் கேட்டால், காவல் நிலைய அதிகாரியிடம் நாம் செல்வதற்கு, நம்மிடம் சான்றுகள் வேண்டும் என்று சொன்னார்.
அந்த விஷயத்தில் அன்று அவர் செய்த தவறை, அவர் இந்த விஷயத்தின் மூலம் சமன் செய்ய நினைக்கிறார் என்று நான் நினைக்கிறேன். அவருக்கு முன்னமே வாய்ப்பு கிடைத்த போதே அவர் இதை சொல்லி இருக்கலாமே? அதை விடுத்து, ஒரு கதை சொல்லல் போன்ற டாஸ்க் வரும் போது, இதை சொல்ல வேண்டிய காரணம் என்ன..?
அவரது கணவரை அவர் ஹீரோ என்றும் அவர்தான் தன்னைக் காப்பாற்றி கொண்டு போனார் என்று சொன்னார். அப்படியானால், இப்போது ஏன் நீங்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தீர்கள்?
அப்போது இந்த மீடியா சினிமாவெல்லாம் வேண்டாம் என்று சொன்ன உங்களது கணவர், இப்போது ஏன் உங்களை மீண்டும் இந்த உலகிற்கு அனுப்பி வைத்திருக்கிறார்? இதற்கு முன்னதாக சீரியலுக்கு வந்தீர்கள்; சீரியலில் இது போன்ற தொந்தரவுகள் இல்லையா கண்டிப்பாக இருக்கிறது..” என்று கேள்வி எழுப்பியுள்ளார். குறித்த விடயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |