பிக்பாஸ் வீட்டின் மீது செருப்பை எரிந்த பூர்ணிமா... சனம் ஷெட்டியின் ஆவேச பதிவு
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் பூர்ணிமா மற்றும் மாயா செய்யும் அட்டகாசத்திற்கு அளவே இல்லாமல் போய்விட்டதாக பார்வையாளர்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
பிக் பாஸ் 7
பிக் பாஸ் 7தமிழ் ,ஆங்கிலம், இந்தி என பிற மொழிகளில் வெவ்வேறு பெயர்களுடன் நடத்தப்பட்டு வரும் நிகழ்ச்சி, பிக்பாஸ். தமிழில், 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு தமிழ் தொலைக்காட்சிகளில் பெரிய அளவில் டி.ஆர்.பி இருக்கிறது.
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிதான் தற்போது தமிழகத்தின் ஹாட் டாப்பிக்காக உள்ளது. சின்னத்திரை தொடர்களை விட, இந்த நிகழ்ச்சியில் பல திருப்பங்கள் நடந்து கொண்டிருக்கிறது. பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி, ஆரம்பித்த முதல் நாளில் இருந்து இந்த நாள் வரை சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சமில்லாமல் நடந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று மாயாவின் செருப்பை கழட்டிய பூர்ணிமா, அதை பிக் பாஸ் வீட்டின் மேல் எறிய முயன்றார்.அப்போது மாயா வேண்டாம் என்று தடுத்ததோடு வேண்டுமென்றால் உங்கள் செருப்பை எறிந்து கொள்ளுங்கள் என்று கூறினார்.
உடனே பூர்ணிமா தனது செருப்பை எடுத்து வந்து அதை வீட்டின் மேல் எறிந்தார். அது மேல் பகுதியில் மாட்டிக்கொண்ட நிலையில் அதை நிக்சன் எடுத்து கொடுத்தார். நல்லவேளை எடுத்துக் கொடுத்தீர்கள் என்று அவருக்கு பூர்ணிமா நன்றி தெரிவித்தார்.
இந்த நிலையில் இந்த நிகழ்வு குறித்து முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் சனம் ஷெட்டி தனது சமூக வலைத்தளத்தில் தனது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார். அவர் இது குறித்து கூறியிருப்பதாவது: எங்கள் அன்பான பிக்பாஸ் செட் மீது செருப்பு வீசுவது பூர்ணிமாவால் மட்டுமே செய்யக்கூடிய மிகவும் அவமரியாதையான செயல்! அந்த வீடு புனிதமானது.
நான் உட்பட பலருக்கு இது ஒரு மதிப்புமிக்க அடையாளத்தை அளித்துள்ளது. நான் அந்த வீட்டை வணங்குகிறேன்! அதனுடன் எனக்கு இருக்கும் உணர்வு பூர்வமான தொடர்பு நிரந்தரமானது.
பூர்ணிமா இவ்வாறு செய்தது தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் வருத்தம், மன்னிக்க முடியாதது! அவர் ஒரு நச்சுப் போட்டியாளர்’ என்று கூறியுள்ளார். குறித்த பதிவு தற்போது இணையத்தில் புதிய புயலை கிளப்பியுள்ளது.
#Poornima throw her shoe out from #biggboss house.....
— Rathi (@Nagarathi) November 23, 2023
its game from her point of view...
if #Archana #Dinesh #vichitra did the same then she will raise her voice n say veethimeral n rulebreaking
you disrespect biggboss house
y still no warning?#BiggBoss7Tamil #BiggbossTamil7 pic.twitter.com/1Zc1IgzRXy
Throwing slippers at our beloved #biggboss set is the most disrespectful thing only #Poornima is capable of doing!
— Sanam Shetty (@ungalsanam) November 25, 2023
That house is sacred. Its given such a valuable identity to so many including me..with lakhs of people still waiting to get that 'once in a lifetime' chance.
I…
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |