ஆர்யனை காதலித்து திருமணம் செய்ய காரணம் என்ன? சீரியல் நடிகை ஷபானா ஓபன் டாக்
செம்பருத்தி சீரியல் நடிகையான ஷபானா நடிகர் ஆர்யனை காதலித்து திருமணம் செய்ததற்கான காரணத்தை கூறியுள்ளார்.
நடிகை ஷபானா ஆர்யன் ஜோடி
பிரபல ரிவியில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியலில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஷபானா. மும்பையை சேர்ந்த இவர் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்ததுடன், சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகின்றார்.
செம்பருத்தி சீரியலில் பார்வதி கதாபாத்திரத்தில் நடித்த இவர் தற்போது மிஸ்டர் மனைவி சீரியலில் நாயகியாக நடித்து வருகின்றனர்.
நடிகர் ஆர்யன் பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் கதாபாத்திரத்தில் நடித்த நிலையில், தற்போது மீனாட்சி பொண்ணுங்க தொடரில் நடித்து வருகின்றார்.
ஷபானா ஆர்யன் இருவரும் கடந்த ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில், தான் ஆர்யனை திருமணம் செய்த காரணத்தை கூறியுள்ளார்.
ஆர்யனை திருமணம் செய்தது ஏன்?
செம்பருத்தி சீரியலில் இந்து பெண்ணாக நடித்ததற்காகவும் பொட்டு வைத்துக் கொண்டதற்காகவும் தன்னுடைய குடும்பத்தினர் ஒரு ஆண்டுகாலம் தன்னுடன் பேசவில்லை...
இந்துப் பையனை திருமணம் செய்யக்கூடாது என்று அவர்கள் கூறி வந்த நிலையில், அவர்களுக்காகவே இந்துப் பையனை காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆர்யனை காதலித்து திருமணம் செய்ததாக கூறியுள்ளார்.
சமீபத்தில் ஆர்யனின் பிறந்தநாளையொட்டி சமூக வலைத்தளங்களில் அடுத்தடுத்து புகைப்படங்களை ஷபானா வெளியிட்ட நிலையில், ரசிகர்கள் வாழ்த்துக்களையும், லைக்ஸையும் குவித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |