வீட்டை எதிர்த்து திருமணம் செய்த பிரபல நடிகை! கொரோனாவிற்கு கூறிய சூப்பர் மருந்து
தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகை சீதா காய்ச்சல், சளி தொல்லையிலிருந்து விடுபடுவதற்கு வீட்டு வைத்தியம் ஒன்றினை காணொளியாக வெளியிட்டுள்ளார்.
நடிகை சீதா
80களில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை சீதா, நடிகர் பார்த்திபன் மீது காதல் ஏற்பட்டு திருமணம் செய்து இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், ஒரு மகனை தத்தெடுத்து வளர்த்தார். 10 ஆண்டு வாழ்விற்கு பின்பு கடந்த 2001ம் ஆண்டு பார்த்திபனை விட்டு பிரிந்தார்.
பார்த்திபன் மீது ஏற்பட்ட காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால், வீட்டை எதிர்த்து 1989ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். மேலும் அவரை திருமணம் செய்த பின்பு பார்த்திபனுக்கு நடிப்பது பிடிக்கவில்லை என்பதால் சினிமாவிலிருந்து விலகினார்.
பின்பு விகாரத்திற்கு பின்பு மீண்டும் நடிப்பை தொடர்ந்த சீதாவிற்கு படவாய்ப்பு சரியாக கிடைக்காததால், சீரியலில் களமிறங்கினார். பின்பு2010ம் ஆண்டு தனது 43ம் வயதில் நடிகர் சதீஷ் சதீஷை காதலித்து திருமணம் செய்து, வெறும் 6 ஆண்டுகளில் விவாகரத்து பெற்றார்.
காய்ச்சலுக்கு வழங்கிய அருமையான டிப்ஸ்
தற்போது தனது தாயுடன் வசித்து வரும் நடிகை சீதா, மாடித் தோட்டம் அமைத்து அவ்வப்போது காணொளி வெளியிட்டு வருகின்றார்.
இந்நிலையில் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் சளி மற்றும் காய்ச்சலுக்கு அருமையான கஷாயம் ஒன்றையும் கூறியுள்ளார்.
துளசி, ஓமவள்ளி, புதினா, இளம் இஞ்சி இவற்றினை எடுத்துக்கொண்ட சீதா இஞ்சியை நன்றாக தட்டிப்போட்டு, சிறிது மிளகு சீரகம் சேர்த்து கஷாயம் செய்து அருந்தினால் காய்ச்சலுக்கு குட்பை சொல்லலாம் என்று கூறியுள்ளார்.