நடிகை சாந்தினியிடம் ரகசிய வாக்குமூலம்! வெளியாகப் போகும் உண்மைகள்?
நாடோடிகள் படத்தில் நடித்துள்ள நடிகை சாந்தினி, அதிமுக முன்னாள் அமைச்சரான மணிகண்டன் மீது பரபரப்பான புகார் ஒன்றை அளித்தார்.
அதில், தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி 5 வருடம் குடும்பம் நடத்தி விட்டு ஏமாற்றிவிட்டதாக கூறினார்.
மூன்று முறை கர்ப்பம் தரித்த நிலையிலும், கருக்கலைப்பு செய்து விட்டதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்தகட்டமாக மணிகண்டனிடமும் விசாரணை நடத்தி அவர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இந்த நிலையில் மணிகண்டன் சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனு மீது விசாரணை நடத்திய ஐகோர்ட்டு, 9-ந் தேதி (நாளை) வரை மணிகண்டனை கைது செய்ய தடை விதித்துள்ளது.
இந்த வழக்கு குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர், சாந்தினி கொடுத்துள்ள ஆதாரங்களை ஆய்வு செய்து வருவதாகவும், கருக்கலைப்பு செய்ததாக கூறப்படும் மருத்துவரிடம் விசாரணை நடத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் மணிகண்டனின் கார் டிரைவர், அவர் அமைச்சராக இருந்த போது அவரிடம் பணியாற்றிய பாதுகாப்பு அதிகாரி ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
சாந்தினி வசித்த அடுக்குமாடி குடியிருப்புக்கு மணிகண்டன் அடிக்கடி சென்று வந்துள்ளார். அந்த அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளியிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
அந்த அடுக்குமாடி குடியிருப்பில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவையும் ஆய்வு செய்து வருகிறோம்.
சாந்தினியை மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தி, அவரிடம் ரகசிய வாக்குமூலம் பெற அனுமதி கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளோம். கோர்ட்டு அனுமதி கிடைத்தவுடன் சாந்தினியிடம் ரகசிய வாக்குமூலம் பெறப்படும்.
இதன்மூலம் பல உண்மைகள் வெளியாகலாம் என தெரிவித்துள்ளார்.