சிறு பிள்ளை என கூட பாராமல் வாரிசு பட நடிகைக்கு அம்மா செய்த கொடுமை
சிறு பிள்ளையென கூட பாராமல் தன்னுடைய அம்மா செய்த கொடுமைகளை நடிகை சங்கீதா ஓபனாக பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை வைத்திருக்கும் நடிகைகளில் நடிகை சங்கிதாவும் ஒருவர்.
இவர் நடிப்பில் குறைவான படங்கள் வெளியாகியிருந்தாலும் இவருக்கென தனி ரசிகர்கள் மன்றம் இருக்கின்றது.
அந்த வகையில் மோகன்லால் நடித்த ஸ்ரதா படத்திலும் சிறிய வேடத்தில் நடித்தார். இந்த படத்தில் பிலிம்பேர் விருதுகளைப் பெற்றன.
நீண்ட இடைவேளைக்கு பின்னர் இவர் வாரிசு திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனாவின் அக்காவாக நடித்திருப்பார்.
அம்மா செய்த கொடுமைகள்
இந்த நிலையில் திருமணம் செய்து கொண்டு குழந்தை, கணவர் என பிஸியாக இருக்கும் சங்கீதா சமீபத்தில் பேட்டியொன்றில் கலந்து கொண்டுள்ளார்.
அப்போது, தன் அம்மாவிற்கு நிறைய விடயங்களுக்கு நன்றி கூறியுள்ளார்.
அதில், “ இந்த உலகிற்கு கொண்டு வந்ததுக்கு மிகவும் நன்றி, பள்ளிக்கூடம் படிக்கும் பொது 13 வயதில் வீட்டை விட்டு துரத்தியதற்கும் நன்றி , சிறுவயதில் வேலைக்கு அனுப்பியதற்கும் நன்றி , மற்றும் குடும்ப சொத்துக்களில் என்னை கையெழுத்து போடவைத்ததற்க்கு மிக்க நன்றி.” என கண்ணீருடன் கூறியுள்ளார்.
இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் வீடியோவை பார்த்த இணையவாசிகள், “ வாழ்க்கையில் கஷ்டங்கள் இருக்கும்.. கவலை வேண்டாம்..” என கருத்துக்களை பதிவு செய்துள்ளார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |