சமந்தாவின் பிரமாண்ட வீட்டின் மதிப்பு எத்தனை கோடின்னு தெரியுமா?
இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வரும் சமந்தாவின் ஹைதராபாத் வீட்டின் விலை மதிப்பு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை சமந்தா
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் கோலிவுட்டில் இருக்கும் விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கிறார்.
நடிகை சமந்தா மற்றும் டோலிவுட் நடிகர் நாக சைதன்யா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் நான்கே வருடத்தில் பிரிந்தார்கள்.
பின் நடிகை சமந்தா மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டார். அதனால், சினிமாவிலிருந்து தற்காலிகமாக விலகுகிறேன் என்றும் அறிவித்தார்.
சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் வெளிநாடுகளுக்கு செல்வது போன்ற செயல்களில் இறங்கினார்.
நடிகை சமந்தா தற்போது வருண் தவானுடன் இணைந்து சிட்டாடலின் இந்திய ரீமேக்கான சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார்.
சமந்தாவின் பிரமாண்ட வீட்டின் மதிப்பு
இந்நிலையில் சமந்தாவின் ஹைதராபாத் பிரமாண்ட வீட்டின் மதிப்பு பற்றிய தகவல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இதன் மதிப்பு சமார் ரூ. 100 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது. நடிகைகளில் விலைஉயர்ந்த வீடு வைத்திருப்பவர் நடிகை சமந்தா தான் என்ற கருத்து கணிப்பும் நிலவிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW |