அந்நாளுக்காக காத்திருக்கிறேன்.. சமந்தாவின் ஆசை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்
“நான் தாயாக வேண்டும் என்ற ஆசை உள்ளது..” என நடிகை சமந்தா பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சமந்தா
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சமந்தா.
இவர் சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலங்களில் பெரிதாக படவாய்ப்புகள் இல்லாவிட்டாலும் நாட்கள் செல்ல செல்ல டாப் ஹீரோக்களுடன் நடிக்க ஆரம்பித்து விட்டார்.
தற்போது தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, இந்தி என பிறமொழிப்படங்களிலும் நடித்து வருகிறார்கள்.
கடந்த சில ஆண்டுகளாக உடல்நல குறைவு காரணமாக சினிமாவுக்கு் ஓய்வு கொடுத்து விட்டு, போட்டோ ஷூட்களில் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் எடுக்கும் புகைப்படங்களை நாட்கள் இடைவேளையில், சமூக வலைத்தளங்களில் பகிர்வது வழக்கம்.
அந்த நாளுக்காக காத்திருக்கிறேன்..
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சமந்தா இயக்குநர் ஒருவரை காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்யப்போவதாகவும் செய்திகள் வைரலாகி வருகின்றன.
இவற்றையெல்லாம் கண்டுக் கொள்ளாத சமந்தாவின் கனவு ஒன்று இணையவாசிகள் மத்தியில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
அதாவது இந்த விடயம் குறித்து நடிகை சமந்தா கூறுகையில், “மற்ற பெண்கள் போன்று எனக்கு ஒரு அம்மாவாக வேண்டும் என்ற ஆசை உள்ளது. இப்போதும் ஒன்றும் காலம் கடந்து விட வில்லை. தாயாக வேண்டும் என்ற ஆசை வெறும் ஆசை இல்லை அது ஒரு அழகான அனுபவம். அந்த நாளுக்கான தான் நான் காத்திருக்கிறேன்..” என பேசியிருக்கிறார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள், “சமந்தாவின் ஆசை நிறைவேற வாழ்த்துக்கள்..“ என கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
