கடைசி வரை நாயோடு தானா? ரசிகரின் மோசமான கமெண்ட் - சமந்தா கொடுத்த நறுக் பதில்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் சமந்தா. இவர் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட 4 வருடங்கள் வாழ்ந்த நிலையில் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்.
அதன் பின்னர் தொடர்ந்து படங்களில் நடித்து வருவது, ஊர் சுற்றுவது என பிஸியாகிவிட்டார்.
அதுமட்டுமின்றி தொடர்ந்து செல்லப்பிராணிகள் லோடு நேரத்தை செலவிட்டு மனதிற்கு ஆறுதல் தேடி வருகிறார்.
இந்நிலையில், இவர் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் நாய்க்குட்டி மற்றும் போன குட்டியுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட இதனைப் பார்த்த ரசிகர் ஒருவர் கடைசியில் நாய், பூனையோட தான் செத்து கிடக்க போறீங்க என பதிவு செய்துள்ளார்.
இதனைக்கண்டு சமந்தா ஒருவேளை அப்படி நடந்தால் நான் மிகவும் சந்தோஷப்படுவேன் என அதிர்ச்சியான பதிலை அளித்துள்ளார்.
இதன் பின்னர் அந்த ரசிகர் அந்த கமெண்டை டெலிட் செய்துள்ளார். இருப்பினும் இதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.
He deleted and ran away ?
— SARAVAN (@Saravan_2255) May 27, 2022
This was the tweet ? pic.twitter.com/H7YZAPmVVC