200 கோடி ரூபாய் ஜீவனாம்சம் கொடுக்க முன்வந்த நாக சைதன்யா குடும்பம்! உதறிய தள்ளிய சமந்தா
நாக சைதன்யாவின் குடும்பத்தினர் ஜீவனாம்சமாக 200 கோடி ரூபாய் கொடுப்பதாக முன்வந்தும் அதனை வேண்டாம் என நடிகை சமந்தா மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்றைய தினம் இருவரும் விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து பிரவதாக அறிவித்திருந்தனர்.
விவாகரத்து முடிவு எடுக்கப்பட்ட நிலையில் நடிகை சமந்தாவுக்கு 200 கோடி ரூபாய் ஜீவனாம்சமாக தருவதாக நாக சைதன்யாவின் குடும்பத்தினர் பேசியுள்ளனர்.
ஆனால் அதனை ஏற்க மறுத்த சமந்தா, நான் நன்றாக சம்பாதிக்கிறேன் எனக்கு பணம் எதுவும் வேண்டாம் என கூறியதாக தெரிகிறது.
நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த சமந்தா - நாக சைதன்யா விவாகரத்து முடிவுக்கு வந்தது ரசிகர்களையும் சினிமா பிரபலங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் இருவரின் ரசிகர்களும் தங்களின் சோகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதேபோல் சினிமா பிரபலங்களும் இருவரின் விவாகரத்து முடிவால் அப்செட் ஆகியுள்ளனர்.