மனசு ரொம்ப வலிக்குது.. விமர்சனங்களால் நொந்து போன நடிகை சமந்தா! வைரலாகும் ஹாட் புகைப்படம்!
முன்னணி நடிகையான சமந்தா அண்மையில், வெளியான தி பேமிலிமேன் 2 என்ற வெப்தொடர் சில சர்ச்சைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக சமந்தாவின் கேரக்டருக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து, சமூக வலைதளங்களில் தனக்கு ஏற்பட்ட விமர்சனங்கள் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில், சமூக வலைதளங்களில் சீண்டல்களை எதிர்கொள்வது என்பது சாதாரண விஷயம் அல்ல என்றும் நெட்டிசன்கள் ஏதோ சொல்லிவிட்டு போகட்டும் என்று சும்மா இருக்க முடியவில்லை என்றும் குறிப்பாக தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்யும்போது மனம் ரொம்ப வலிக்கிறது என்று கூறியுள்ளார்...
மேலும், பல ஆண்டுகளாக சினிமா துறையில் இருப்பதால் இது போன்ற சோதனைகளை எளிதாக கடந்து செல்ல முடியும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக கூறிய சமந்தா, தன்னம்பிக்கை காரணமாகவே சமூகவலைத்தள சீண்டல்களை சமாளித்து வருகிறேன் என்றும் இதுகுறித்து ஒரு சில நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.