150kg எடையை அசால்ட்டாக தூக்கிய சமந்தா- இவரிடம் எவ்வளவு சொத்து இருக்கு தெரியுமா?
பிறந்த நாளில் 150kg எடையை தூக்கும் காணொளியை பகிர்ந்து சமந்தாவின் சொத்து மதிப்பு விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
நடிகை சமந்தா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடிக்கட்டி பறக்கும் நடிகை தான் சமந்தா.
இவர் விஜய், சூர்யா என முன்னணி நடிகருடன் நடித்து தனக்கென ஒரு ரசிக பட்டாளத்தை தென்னிந்தியாவில் உருவாக்கி வைத்திருக்கிறார்.
சமந்தா நடிப்பில் கடைசியாக குஷி திரைப்படம் வெளியானது. காதலுடன் கூட அன்பை அழகாக இந்த படத்தில் காட்டிருப்பார்.
அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா தற்போது ஓய்விலிருந்து வருகிறார். அவ்வப்போது எடுத்து கொள்ளும் புகைப்படங்கள் மாத்திரம் சமூக வலைத்தளங்களில் பகிர்வார்.
விவாகரத்து
சமந்தா, கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் இருவரும் சில வாக்குவாதங்கள் காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள்.
நோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த சமந்தாவுடன் நாக சைதன்யா சேர போவதாக தகவல் வெளியான நிலையில் அதற்கு வாய்ப்பு இல்லை என கூறும் வகையில் நாக சைத்தன்யா சோபிதாவை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.
சொத்து மதிப்பு
இந்த நிலையில், நேற்றைய தினம் 38வது பிறந்த நாளை கொண்டாடிய சமந்தா அவருடைய சமூக வலைத்தளங்களில் 150 கிலோகிராம் எடையை தூக்குவது போன்ற காணொளியை பகிர்ந்துள்ளார். அத்துடன் சமந்தாவின் சொத்து மதிப்பு விவரங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
அந்த வகையில், முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தாவிடம் ரூ. 101 கோடிக்கும் மேல் சொத்துக்கள் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இவர் ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ. 3 கோடி முதல் ரூ. 8 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.
ஆனால், கடைசியாக வெளிவந்த சிட்டாடல் வெப் சீரிஸில் நடிப்பதற்காக ரூ. 10 கோடி சம்பளம் வாங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹைதராபாத்தில் உள்ள சமந்தாவின் 3BHK பிளாட் விலை ரூ. 7.8 கோடி இருக்கும் என்கின்றனர்.
மேலும் மும்பையில் சமந்தா வாங்கியுள்ள 3BHK வீட்டின் விலை ரூ. 15 கோடியாகும் என தகவல் கூறப்படுகிறது. ஆனால், இந்த சொத்து மதிப்பு குறித்து வெளிவந்துள்ள தகவல், அதிகாரப்பூர்வமானது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |