நடிகை சமந்தாவின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?
நடிகை சமந்தா தனது பிறந்தநாளை இன்று கொண்டாடும் நிலையில் அவரது சொத்து மதிப்பு குறித்த விபரம் தற்போது வெளியாகியுள்ளது.
நடிகை சமந்தா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை சமந்தா. சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் பயணித்து வரும் நிலையில், பல சர்ச்சையிலும் சிக்கியுள்ளார்.
தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சனை, உடல்நலக் கோளாறு என அடுத்தடுத்து கஷ்டங்களை சந்தித்த சமந்தா தற்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றார்.

கடந்த ஆண்டு இயக்குநர் ராஜ் நிடிமொருவைக் காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது இவரது மா இண்டி பங்காரம் வெளிவர தயாராக இருக்கின்றது.

இப்படத்தில் ஆக்ஷன் நாயகியாக கலக்கியுள்ள சமந்தா, இன்று தனது 39வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். திரையுலகினர், பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ.110 கோடிக்கு மேல் இருப்பதாக கூறப்படுகின்றது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |