முதல்வர் விஜய்யை சந்தித்த சமந்தா... வெளியிட்ட இன்ஸ்டா பதிவு
நடிகை சமந்தா முதல்வர் விஜய்யை சந்தித்து வாழ்த்து கூறிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை சமந்தா
சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்த விஜய் சட்டென சினிமாவை விட்டுவிட்டு, அரசியலுக்கு வந்து தற்போது முதல்வராக பதவி ஏற்று மக்களை வியக்க வைத்து வருகின்றார்.
இந்நிலையில் விஜய்யுடன் தெறி, கத்தி, மெர்சல் போன்ற படங்களில் நடித்த நடிகை சமந்தா அவரை நேரில் சந்தித்து வாழ்த்து கூறியுள்ளார்.
நேற்று எங்கள் தங்கம் படச் செய்தியாளர் சந்திப்பிற்கு சென்னை வந்த சமந்தா முதலமைச்சரை சந்தித்துள்ளார். மேலும் அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தினையும் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

எல்லையற்ற மகிழ்ச்சியில் சமந்தா
சமந்தா தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள பதிவில், இன்று சென்னையில் இறங்கும்போது முதல்வரை சந்திக்க போகிறேன் என்று தனக்குள் அளவற்ற மகிழச்சி ஏற்பட்டது.
சினிமா திரையில் மட்டும் இருக்க வேண்டியவர் அல்ல என்று தான் அடிக்கடி நினைப்பதுடண், இவரது ஆளுமை, ஆற்றல், மக்கள் மீது கொண்ட அன்பு இவற்றினை பார்த்து ஏதோ ஒன்றிற்காகவே பிறந்தவர் என்று உணர்த்தியது.
முத்திரை பதித்த துறையை விட்டுவிட்டு, பல சவால்கள், பொறுப்புகள் நிறைந்த துறையை எடுத்துள்ளது சாதாரண விஷயமல்ல... அவரது துணிச்சல் தான் முக்கிய காரணம்.

நம்மில் பெரும்பாலான நபர்களுக்கு சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஏற்பட்டாலும் அதனை செயல்முறை படுத்துவது என்பது விஜய் சார் போன்ற நபரால் தான் முடியும்.
இந்த பாதையில் அவர் பயணிப்பதற்கு தேவையான வலிமை, ஞானம், துணிச்சல் இவைகள் கிடைக்க வேண்டும் என வாழ்த்துவதாக தனது பதிவில் கூறியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |