மது பழக்கத்தினால் தடம்மாறிய பிரபல நடிகையின் வாழ்க்கை: வெளியான பல உண்மைகள்
நடிகை சதா சினிமாவிலிருந்து ஓரங்கட்டப்பட்டதற்கு காரணம் அவரது போதை பழக்கம் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
தெலுங்கில் வெளியான ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சதா. தொடர்ந்து தெலுங்கில் பிராணம், நாகா ஆகிய படஙஙகளில் நடித்தார்.
மாதவனுடன் எதிரி, பிரியசகி ஆகிய படங்களில் நடித்ததோடு, பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் படத்தில் நடித்து டாப் ஹீரோயினாக வலம் வந்தார்.
ஒரு கட்டத்திற்கு மேல் பட வாய்ப்புகள் இல்லாமல் போனதால் நகைச்சுவை நடிகர் வடிவேலுவுக்கு ஜோடியாக எலி படத்தில் நடித்த நிலையில், இறுதியாக பாலியல் தொழில் செய்யும் பெண்ணாக டார்ச் லைட் என்ற படத்தில் நடித்தார்.
இந்நிலையில் நடிகை சதா சினிமாவிலிருந்து ஓரங்கட்டப்பட்டதற்கு காரணத்தினை, பிரபல நடிகரும் விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
பயில்வான் ரங்கநாதன் சினிமாவில் நடிகராகவும் பத்திரிக்கை துறையில் சினிமா தொடர்பான விமர்சனங்களை எழுதும் விமர்சகராகவும் உள்ளார்.
அவ்வப்போது ஊடங்களுக்கு பேட்டியளித்து வரும் பயில்வான் ரங்கநாதன் சினிமா நட்சத்திரங்கள் தொடர்பான ரகசியங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் நடிகை சதா குறித்து கூறியுள்ள பயில்வான் ரங்கநாதன், சதா சினிமாவில் இருந்து ஓரங்கட்டப்பட காரணம், அவரது போதை பழக்கம் தான் என தெரிவித்துள்ளார். நடிகை சதா சர்வகாலமும் குடி சிகரெட் என்று இருந்ததாலேயே ஓரங்கட்டப்பட்டார் என்றும் கூறியுள்ளார்.
மேலும் சதா ஷூட்டிங் ஸ்பாட்டில் புகைப்பிடிப்பதை தானே பார்த்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். எப்போதும் போதை பழக்கத்துடன் இருந்ததால் தான் சினிமாவில் இருந்து அவர் ஓடி விட்டதாகவும் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். பயில்வான் ரங்கநாதன் நடிகை சதா குறித்து கூறியுள்ள இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.