என் கணவர் இப்படி தான் இருக்கவேண்டும்! 38 வயதில் திருமணம் பற்றி நடிகை சதா ஓபன் டாக்;
தமிழ் சினிமாவில் ஜெயம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சதா. இப்படத்தின் வெற்றியின் மூலம் எதிரி, வர்ண ஜாலம், அந்நியன், பிரியசகி, திருப்பதி, உன்னாலே உன்னாலே, புலி வேஷம் உள்ளிட்ட படங்களிலும், தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார்.
இதனிடையே, பல்வேறு நிகழ்ச்சிகளில் நடுவராகவும் சதா பணியாற்றி வருகிறார். இந்நிலையில், 38 வயதாகும் சதா இதுவரை திருமணம் செய்யாமல் உள்ளார்.
திருமணம் வேண்டாம்
இதுகுறித்து அண்மையில் பேசிய அவர், “என்னிடம் நிறைய பேர் திருமணம் செய்துகொள்ளுங்கள் என கேட்டுள்ளனர். குழந்தையை பெற்றுக்கொள்ளுங்கள் எனவும் கூறினர். என் வாழ்க்கையை முடிவு செய்யும் அதிகாரத்தை அவர்களுக்கு யார் கொடுத்தது?
திருமணம் செய்யும் 10 ஜோடிகளில் ஐந்து பேர் கூட சந்தோஷமாக இருக்க முடியவில்லை. யாரோ என்னை சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும் என ஏன் நினைக்க வேண்டும்.
மேலும், மற்றவர்கள் எதற்காக உழைக்க வேண்டும்.. என் வாழ்க்கையை நான் ஆனந்தமாக கழிக்க வேண்டும் என நினைக்கிறேன். நான் பார்ட்டி பப் என செல்வது இல்லை.
கணவர் இப்படி வேண்டும்
திருமணம் செய்துகொண்டால் அதன் பிறகு சந்தோஷமாக இருக்க முடியாது.
திருமணம் என்ற பெயரில் மற்றவர்களை சார்ந்து இருப்பதால், நெருக்கடியையும் அவரே தாங்க வேண்டும்.
ஒரு வேளை நான் திருமணம் செய்வதாக இருந்தால், மணமகன் எனது சம்பாத்தியத்தை சார்ந்து இருக்கக்கூடாது” என தெரிவித்துள்ளார்.