உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு... கதறி அழுது நடிகை சதா வெளியிட்ட காணொளி!
Wildlife போட்டோகிராபராக மாறியுள்ள நடிகை சதா தற்போது கதறி அழுதப்படி தனது சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை சதா
தமிழ் சினிமாவில் ஜெயம் திரைப்படம் மூலம் அறிமுகமாகிய சதா முதல் படத்திலேயே தனக்கொன ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார்.
அதனை தொடர்ந்து பிரம்மாண்ட இயக்குனராக திகழும் சங்கர் இயக்கத்தில் அன்னியன் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு அமைந்தது.அன்னியன் சூப்பர் ஹிட் கொடுத்தால், பட்டி தொட்டியெல்லாம் இவர் புகழ் பரவிது.
அவர் தமிழில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் நீக்காத இடம் பிடித்துள்ளார்.
தற்போது திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து தனது முழு கவனத்தையும் வைல்ட்லைப் போட்டோகிராபியின் மீது செலுத்தியுள்ளார்.
கையில் கேமராவுடன் காடுகளுக்கு சென்று சிங்கம், புலி, யானை, மற்றும் பறவைகள் என விதவிதமாக வைல்ட்லைப் புகைப்படங்களை எடுத்து தனது சமூக வளைத்தள பக்கத்தில் பதிவேற்றி வருகின்றார்.
இந்நிலையில் தற்போது எல்லா தெரு நாய்களையும் பிடித்து காப்பகத்தில் அடைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு தொடர்பாக குறிப்பிட்டு, சதா கதறி அழுது காணொளியொன்றை வெளியிட்டுள்ளார். குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருவதுடன் கலவையான விமர்சனங்களையும் பெற்று வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |