குத்து சண்டையில் பெண்ணின் முகத்தில் குத்திய ரோஜா! வைரல் புகைப்படம்
நடிகையும், அமைச்சருமான ரோஜா குத்துச்சண்டை விளையாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
குத்து சண்டையில் நடிகை ரோஜா
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் 12வது மினி ரோல் பால் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு நடிகை ரோஜா பரிசுகளை வழங்கியுள்ளார்.
இந்த நிகழ்வின் பின்னர் 11 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகளின் விளையாட்டு போட்டியை நடத்தியுள்ளார். இதில் 19 மாநிலங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்ற நிலையில், நடிகை ரோஜா படிப்புடுன் விளையாட்டிலும் சிறந்து விளங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
பின்னர் அங்கிருந்த பெண்களுடன் ரோஜா குத்துச்சண்டை விளையாடிய நிலையில் மாணவர்கள் இருவரையும் உற்சாகப்படுத்தினார்.
அப்போது தன்னை எதிர்த்து விளையாடிய பெண்ணின் முகத்தில் ரோஜா ஓங்கி ஒரு குத்து விட்ட நிலையில் அங்கிருந்தவர்கள் உற்சாக குரல் எழுப்பி ஆரவாரம் செய்துள்ளனர்.
இது குறித்த புகைப்படங்கள் ரோஜாவின் சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.