என் மகளின் புகைப்படங்கள் மார்ஃபிங் செய்யப்படுகின்றது! நடிகை ரோஜா காட்டம்
நடிகை ரோஜா என் மகளின் போட்டோவை மார்ஃபிங் செய்தும், என்னைப் பற்றி ஆபாசமான படங்களை வெளியிட்டும் வருகிறார்கள் இது வேதனை அளிக்கின்றது என்று தெரிவித்துள்ளார்.
ரோஜா
1998-ம் ஆண்டு வெளியான உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் திரைப்படம் தான். திரையுலகுக்குள் நுழைந்து சில வருடங்களுக்குள்ளாகவே ரஜினிகாந்த்துடன் உழைப்பாளி மற்றும் வீரா ஆகிய படங்களில் ஜோடி சேர்ந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றார் ரோஜா.
பல முன்னணி நடிகரிகளுடன் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த ரோஜா . 2002-ல் இயக்குநர் ஆர்.கே. செல்வமணியை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 2 பிள்ளைகள்.
இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.
அதில் என் மகளின் போட்டோவை மார்ஃபிங் செய்தும், என்னைப் பற்றி ஆபாசமான படங்களை வெளியிட்டும் வருகிறார்கள் இது வேதனை அளிக்கின்றது என்று தெரிவித்துள்ளார்.
பேட்டியில் சொன்ன தகவல்
சமூக வலைதளங்களில் சமீப காலமாக என் மீதும் என் குடும்பத்தினர் மீதும் வரும் அவதூறுகள் வேதனை அளிக்கிறது
பிறந்த நாளில் எனது சகோதரர் முத்தமிட்டதை கூட ஆபாசமாக்கி அசிங்கப்படுத்தினார்கள்.
இப்போது என் மகளின் போட்டோவை மார்ஃபிங் செய்தும், என்னைப் பற்றி ஆபாசமான படங்களை வெளியிட்டும் வருகிறார்கள்.
ஆனால் அதை பார்த்த என் மகள் மிகவும் கவலைப்பட்டாள். இதெல்லாம் நமக்குத் தேவையா? என என்னிடம் கேட்கிறாள். அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று எனக்கு தெரியவில்லை.
பிரபலங்களுக்கு இது போன்ற விஷயங்கள் எல்லாம் சகஜம் இவற்றை பெரிதுபடுத்தி அதில் கவனம் செலுத்தினால், நம்மால் முன்னேற முடியாது, என என் குழந்தைகளுக்கு நானே சொல்லி வருகிறேன் என்று கூறியுள்ளார்.
தற்போது இந்த விஷயம் சமூகவலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது.