குழந்தையின்மையால் கசந்துப் போன வாழ்க்கை.. 11 ஆண்டுகளில் முறிந்துப் போன ரேவதியின் காதல்
குழந்தையின்மையை காரணமாக காட்டி விவாகரத்து பெற்ற ரேவதியின் காதல் கதைப் பற்றி தெரியுமா?
நடிகை ரேவதி
30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் நடிகை ரேவதி. இவர் மண் வாசனை திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அப்போதைய காலக்கட்டத்தில் உச்சியில் இருந்தார்.
இவரது நளினத்திற்கும் சிரிப்பிற்குமே ஒரு ரசிகர் கூட்டம் இருந்தது. மேலும், அப்போதைய காலத்தில் இருந்த பல முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்திருக்கிறார்.
தற்போது இவர் பெரியளவில் திரைப்படங்களில் நடிக்காவிட்டாலும் அண்மையில் ஜோதிகாவுடன் ஜாக்பாட் திரைப்படத்தில் நடித்து நம்மை நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கி இருந்தது.
ரேவதியின் காதல் கதை
நடிகை ரேவதி புதிய முகம் திரைப்படத்தில் நடித்த சுரேஷ் மேனனை காதலித்து வந்தார். பிறகு இவர்கள் இருவரும் திருமணம் செய்துக் கொண்டு வாழ்ந்த வேளையில், குழந்தையின்மை பிரச்சினை பெரும் பிரச்சினையாக இருந்தது.
இதனால் 2013ஆம் ஆண்டு இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்துப் பெற்றுக் கொண்டனர். கணவரை விவாகரத்து செய்தப் பின் செயற்கை முறையில் குழந்தைப் பெற்றுக் கொண்டார் நடிகை ரேவதி.
பல காலமாக வெளியில் குழந்தையை வெளியில் காட்டாமல் இருந்த அவர் தனது 48வது பிறந்தநாளில் குழந்தையை அறிமுகம் செய்தார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |