2002ல் ரஜினிக்கு ஜூஸ் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்த சிறுமி யார் தெரியுமா? இந்த பிரபல நடிகையின் மகளா?
பிரபல நடிகை ரேகா அவரின் சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
ரஜினி கடந்த 2002-ம் ஆண்டு காவிரியில் இருந்து நீர் திறக்க கோரி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரே உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.
ரஜினி தலைமையில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதத்தில் திரைத்துறையை சேர்ந்த ஏராளமான நடிகர், நடிகைகள் பங்கேற்றனர். காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை சுமார் 9 மணி நேரம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார் ரஜினி.
இந்த உண்ணாவிரதத்தை நடிகர் ரஜினி முடித்து கொண்ட போது நடிகை ரேகாவின் மகள் தன ரஜினிக்கு ஜூஸ் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்துள்ளார்.
இத்தகவலை போட்டோவுடன் ஷேர் செய்து கொண்டுள்ள நடிகை ரேகா இந்த சிறப்பு தருணத்தை நினைவூட்டும் போட்டோவை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு Rajinifield l_2k kids-க்கு நன்றி.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் காவிரி பிரச்சினையில் தனது 9 மணிநேர உண்ணாவிரதத்தை முடித்த போது, என் மகள் கொடுத்த ஒரு கிளாஸ் ஜூஸைப் அருந்தினார். அதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நபராகவும், ஒரு நல்ல காரணத்தின் ஒரு பகுதியாகவும் என் மகள் ஆசீர்வதிக்கப்பட்டாள்" என்று குறிப்பிட்டுள்ளார்.