இறப்பதற்கு முன்பு தனக்கு கல்லறை கட்டிய பிரபல நடிகை! காரணம் என்ன தெரியுமா?
பிரபல நடிகை ரேகா இறப்பதற்கு முன்பு தனக்கு கல்லறை கட்டி அதனை பராமரித்து வருவது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை ரேகா
கேரளாவில் பிறந்து வளர்ந்த இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் முன்னணி நடிகர்களின் படங்களில் இணைந்து நடித்து நிறைய வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.
பின்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், சமீபத்தில் பிரபல ரிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா சீரியலில் வெண்பாவின் தாயாக நடித்து வருகின்றார்.
தமிழில் இவரது வெற்றிப் படங்கள் என்றால் புன்னகை மன்னன், என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, கடலோரக் கவிதைகள், குணா உள்ளிட்ட படங்களை கூறலாம்.
இறப்பதற்கு முன்பு கல்லறை
இந்நிலையில் தந்தை மீது அதிக பாசம் கொண்ட நடிகை ரேகா அவருக்கு கல்லறை கட்டியதோடு தந்தை சமாதியின் அருகே தனக்கும் கல்லறை கட்டி வைத்துள்ளாராம்.
மேலும் உயிருடன் இருக்கும் போதே நடிகை ரேகா தனக்கு கல்லறை கட்டி அதை தற்போது பராமரித்து வருவது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.