நிச்சயதார்த்தம் நடந்ததை உறுதிப்படுத்திய ராஷ்மிகா மந்தனா! குவியும் வாழ்த்துக்கள்
நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கும், விஜய் தேவரகொண்டாவுக்கும் ஐதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் நிச்சயதார்த்த மோதிரத்தை வெளிப்படுத்தும் வகையில், நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் வைராலாகி வருகின்றது.
நடிகை ராஷ்மிகா
ராஷ்மிகா மந்தனா நேஷனல் கர்ஷ் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா.
'கிரிக் பார்ட்டி' எனும் கன்னட திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமாகிய இவர், அதனை தொடர்ந்து தெலுங்கில் கீதா கோவிந்தம் படத்தில் நடித்து பிரபல்யம் ஆனார்.
தமிழில் சுல்தான், வாரிசு உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான புஷ்பா 2 படம் கிட்டத்தட்ட 2000 கோடி வசூலை நெருங்கி இந்திய சினிமாவில் வசூல் ரீதியாக சாதனை படைத்தது. அதனை தொடர்ந்து ராஷ்மிகா நடிப்பில் Chhaava என்ற ஹிந்தி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
திரையில் ஜோடியாக வலம் வந்த விஜய் தேவர்கொண்டா- ராஷ்மிகா மந்தனா இருவரும் பல வருடங்களாக வெளியுலகிற்கு தெரியாமல் டேட்டிங் செய்து வருகிறார்கள்.
ஆனால் அவர்களின் காதல் விவகாரம் குறித்து இதுவரையில் வாய் திறக்கவில்லை. இருப்பினும் அவர்கள் காதலிப்பது உலகறிந்த விடயம் தான்.
இந்நிலையில், ராஷ்மிகா மந்தனா -விஜய் தேவரகொண்டாவின் நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் உள்ள நடிகர் விஜய் தேவரகொண்டாவின் இல்லத்தில் நடைபெற்றுள்ளதாக சில தினங்களுக்கு முன்னர் தகவல்கள் வெளியானது.
இந்த நிச்சயதார்த்த நிகழ்வில், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்றதாகவும், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இருப்பினும் இது குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா அல்லது விஜய் தேவரகொண்டா தரப்பில் இருந்து இதுவரையில், எந்த உறுதிப்படுத்தப்பட்ட தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நிச்சயதார்த்த மோதிரத்துடன் ராஷ்மிகா மந்தனா தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த மோதிரத்தை பார்த்த ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |