28 வயதில் அசரவைக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் சொத்துமதிப்பு
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் சொத்துமதிப்பு குறித்த முழு தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை ராஷ்மிகா மந்தனா
பெங்களூரை பூர்வீகமாகக் கொண்ட ராஷ்மிகா மந்தனா 2016ம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
அதன்பின் விஜய் தேவரகொண்டாவுடன் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் படங்களில் நடித்தார். இதனைத்தொடர்ந்து புஷ்பா உள்ளிட்ட படங்களில் நடித்து அசத்தினார்.
தமிழில் கார்த்தி நடித்த சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமானார்.அதன் பின் விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்து அசத்தியுள்ளார்.
மேலும், ஹிந்தியில் குட் பை, மஜ்னு, அனிமல் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உருவாகும் குபேரா படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார் ராஷ்மிகா.
சொத்து மதிப்பு
இந்நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனாவிற்கு 45- 50 கோடி ரூபாய் வரை மொத்த சொத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அதேபோல், ரூ. 50 லட்சம் மதிப்புள்ள Benz C Class, ரூ.40 லட்சம் மதிப்புள்ள Audi Q3 சொகுசு கார் மற்றும் Range Rover காரையும் சொந்தமாக வைத்திருக்கிறார்.
மேலும் ஹைதராபாத், பெங்களூரு, மும்பை உள்ளிட்ட இடங்களில் சொகுசு பங்களாக்களையும் வாங்கியிருக்கிறார்.
வேறு சில தொழில்களிலும் சினிமாவில் சம்பாதித்த பணத்தை முதலீடு செய்து அதன் மூலமாகவும் வருமானத்தை ஈட்டிவருகிறாராம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |