என் கணவர் யாருடனும் பேசமாட்டார்... நித்தியானந்தாவை பற்றி நடிகை ரஞ்சிதா உருக்கம்! வைரல் வீடியோ
90ஸ் காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ரஞ்சிதா. இவர், சுவாமி நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் சேர்ந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் தனிமையில் இருக்கும் வீடியோ காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.
இந்த வீடியோ வெளியாகி அப்போதே பரபரப்பை ஏற்படுத்தியிருந்தாலும், அவை போலியானவை என நித்தியானந்தா விளக்கமளித்திருந்தார்.
ஆனால், ரஞ்சிதா தான் நித்தியானந்தாவை வழி நடத்துகிறார் என பல செய்திகள் வெளிவரத்தொடங்கின.
இந்நிலையில், உடல் நிலையில் மோசமடைந்து அன்றாடம் சில தகவல்களை வெளியிட்டு வரும் நித்தியானந்தாவுக்கு மத்தியில், ரஞ்சிதா கடந்த ஆண்டு குமுதம் நாளிதழுக்கு அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது.

அந்த பேட்டியில் ரஞ்சிதா தெரிவிக்கையில், எனக்கு அப்படியே மாறுப்பட்டவர் தான் என் கணவர். அதிகம் யாரிடமும் பேசமாட்டார். என் வாழ்க்கையில் பார்த்த ஒரே பேலன்ஸ்டு நபர் என்றால் அது அவர் தான். என்ன பிரச்சினை என்றாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளமாட்டார்.
16 ஆண்டுகளாக அவருடன் குடும்பம் நடத்தி வரும் நிலையில், ஒரு நாள் கூட அவர் கோபப்பட்டு பார்த்ததில்லை.
என்னை யாராவது பேசிவிட்டால் அதற்கு நான் கோபப்படுவேன். ஆனால் அவர் என்னை சமாதானம் செய்வார் என பேசியதை வைரலாக்கி ரஞ்சிதா எங்கே என கேட்டு வருகின்றனர்.