பாவாடை தாவணியில் ரம்யா பாண்டியன் வெளியிட்ட அழகிய புகைப்படம் - சகோதரர் கேட்ட ஒற்றை கேள்வி
தமிழ் சினிமாவின் நடிகையும், பிக்பாஸ் புகழ் பெற்ற நடிகையான ரம்யா பாண்டியன் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி ஏதாவது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றுவார்.
இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2 மில்லியன் ஃபாலோயர்கள் பின் தொடர்கிறார்கள். இந்நிலையில், தற்போது அவர் பாவாடை தாவணியில் எடுக்கப்பட்ட போட்டோஷூட் புகைப்படங்களை ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்த புகைப்படத்தின் கேப்ஷனாக அவர் தனுஷ், சமந்தா நடித்த தங்கமகன் படத்தில் இடம்பெற்ற பாடல் வரிகளை பதிவு செய்துள்ளார்.
இவரின் பதிவுக்கு ரம்யா பாண்டியனின் தம்பி பரசு பாண்டியன் கமெண்ட்ஸில் யார் அந்த பையன் என கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த ரம்யா பாண்டியன் பாடல் வரிகளை ரசிக்க வேண்டும் ஆராயக்கூடாது என பதில் கொடுத்துள்ளார்.


