3 வருடமாக தொடர்ந்த காதல் டார்ச்சர்... வெளிப்படையாக கூறிய ரம்யா பாண்டியன்
நடிகை ரம்யா பாண்டியன் தனது காதல் கதை குறித்த உண்மையை தற்போது வெளியிட்டுள்ளார்.
ரம்யா பாண்டியன்
ஜோக்கர் படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை ரம்யா பாண்டியன். பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
சீசன் 4ல் கலந்து கொண்ட இவர் உள்ளே இருந்த போட்டியாளர்களிடம் மட்டுமின்றி பார்வையாளர்களிடமும் விஷப்பாட்டில் என்று பெயர் வாங்கினார்.
அந்த அளவிற்கு அமைதியாக இருந்து விளையாடிய இவர் இறுதியில் மூன்றாவது இடத்தை பிடித்தார். பின்பு இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றார்.
மூன்று வருட காதல் கதை
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பேசிய ரம்யா பாண்டியன் தன்னுடைய காதல் கதையைக் குறித்து பேசியுள்ளார்.
இவர் கல்லூரி படிக்கும் போது இவரைப் பார்ப்பதற்கு பேருந்து நிலையத்திற்கு தினமும் ஒருவர் வருவாராம். கல்லூரி சென்று திரும்பி வரும்போதும் அவர் அங்கேயே இருப்பாராம்.
இவ்வாறு மூன்று ஆண்டுகள் தொடர்ந்து கொண்டே இருந்துள்ளது. கடைசியாக குறித்த நபர் ரம்யா பாண்டியனிடம் வந்து அவரது காதலைக் கூறியுள்ளாராம்.
ஆனால் ரம்யா பாண்டியன் அவரது காதலுக்கு மறுப்பு தெரிவித்து விட்டதாக கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |