நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு இவ்வளவு பெரிய மகனா? ஹீரோ மாதிரி இருக்காரே
நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது மனனுடன் எடுத்துக்கொண்ட தற்போதைய புகைப்படமொன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை ரம்யா கிருஷ்ணன்
தனது தனித்துவமான நடிப்பாலும் வித்தியாசமான கதாபாத்திரங்களாலும் ரசிகர்கள் மனங்களில் நீங்காத இடம்பிடித்தவர் தான் நடிகை ரம்யா கிருஷ்ணன்.
கதாநாயகியாக மட்டும் இல்லாமல் வில்லி, குணச்சித்திர நடிகை என பன்முக தன்மை கொண்ட ரம்யா கிருஷ்ணனுக்கு எல்லா மொழிகளிலும் ரசிகர்கள் இருக்கின்றார்கள்.
இவர் 80 மற்றும் 90களில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தவர். அதுமட்டுமில்லாமல் சாமி படங்கள் என்றாலே அது ரம்யா கிருஷ்ணன்தான் எனுமளவுக்கு தனது தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்துவார்.
ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் ஏராளமான ஹிட் படங்கள இருந்தாலும் அவருக்கு பெரிய ரீச் கொடுத்த படம் ரஜினியின் படையப்பா திரைப்படம் தான்.அதில் நீலாம்பரி கதாபாத்திரம் இன்று வரையில் மக்களால் பெரிதும் பேசப்படுகின்ற ஒன்றாகவே காணப்படுகிறது.
அதனை தொடர்ந்து பாகுபலி படத்தில் சிவகாமி கதாப்பாத்திரத்தில் இவரை தவிர யாருக்கு பொருந்தாது எனும் அளவுக்கு சிறப்பாக நடித்திருப்பார். தற்போது சில தொலைக்காட்சி நிகழ்சிகளில் நடுவராகவும் பங்கேற்று வருகின்றார்.
இந்நிலையில், நடிகை ரம்யா கிருஷ்ணன் தன்னுடைய மகனுடன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்த புகைப்படமொன்று தற்போது இணையத்தில் வைராலாகி வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள் இருக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கின்றாரா? என தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
