நடிகை ரம்பாவுக்கு என்ன ஆச்சு?.. நடக்கமுடியாமல் பரிதாபமாக வந்த காட்சியால் அதிர்ச்சி
நடிகை ரம்பா உடல் எடை அதிகரித்து நடக்கமுடியாமல் வந்த காட்சி ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நடிகை ரம்பா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் தான் ரம்பா. ரஜினி, கமல், அஜித், விஜய் என முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்து மக்கள் மனதில்இடம்பிடித்தார்.
மிகவும் குறுகிய காலத்தில் டாப் நடிகைகளில் ஒருவராக வலம்வந்த ரம்பா, தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் மொழிகளில் நடித்து அசத்தினார்.
தமிழ் சினிமாவில் தொடை அழகி என்று அழைக்கப்பட்ட ரம்பா 2010ம் ஆண்டு புலம்பெயர் தமிழராக இந்திரகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள், ஒரு மகன் உள்ள நிலையில், சில ஆண்டுக்கு முன்பு குடும்பமாக விஜய்யை சந்தித்து புகைப்படம் வெளியிட்டனர்.
பின்பு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதுடன், அவ்வப்போது புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தார். தற்போது இணையத்தில் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைக்கும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
கணவரின் தொழிலைக் கவனித்து வந்த ரம்பா அவறுடன் வெளிநாட்டில் இருந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு எதிர்பாராமல் விபத்தில் ஒன்றில் குடும்பமாக சிக்கியுள்ளனர்.
இதில் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லாமல் குடும்பத்தினர் அனைவரும் தப்பித்த நிலையில், சிறிய காயங்கள் இருந்ததுடன், பின்பு உடல்நலம் தேறி வந்திருந்தார்.
தற்போது வெளியான காட்சியில், ரம்பா உடல் எடை அதிகரித்து, நடக்க முடியாமல் வருவதுடன், முகமும் பொலிவிழந்து பார்ப்பதற்கு பரிதாபமாக காட்சியளிக்கின்றார். இதனை அவதானித்த ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்த நிலையில், இதற்கு காரணம் அப்போது நடைபெற்ற விபத்தாக இருக்குமா என்று பேசி வருகின்றனர்.
டீக்கடையார் பார்த்தா மனச விட்ருவார் pic.twitter.com/6OhQtiZuZX
— விமலிசம் (@withkaran) July 1, 2026
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |