இவர் இப்படியும் பண்ணுவாரா? ரம்பாவை வாய்ப்பு பார்த்து கலாய்த்த தேவயானி
“ஆண்டுக்கு 14 படங்களில் கமிட்டாகியது எப்படி? வாய்ப்பு பார்த்து கலாய்த்து விட்டாங்க தேவயானி..” என ரம்பா பேட்டியில் மறந்து திறந்து பேசியுள்ளார்.
நடிகை ரம்பா
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் தான் ரம்பா.
இவர் நடிப்பில் வெளியான ஏகப்பட்ட திரைப்படங்கள் தமிழ் சினிமாவிற்கு பாரிய திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து திருமணம் செய்து கொண்ட ரம்பா சுமாராக 14 வருடங்கள் சினிமாவிற்குள் வராமல் இருக்கிறார்.
திருமணத்திற்கு பின்னர் எந்தவிதமான நிகழ்ச்சிகளிலும், படங்களிலும் தலைகாட்டாத ரம்பா, தனது சமூக வலைத்தளங்களில் மட்டும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
வாய்ப்பு பார்த்து கலாய்ப்பாங்க..
இந்த நிலையில் பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டிக் கொடுத்த நடிகை ரம்பா அவர் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த நேரங்களில் சக நடிகர், நடிகைகளுடன் நடந்த சுவாரஷ்யமான சம்பவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதில், “ தேவயானி என்னிடம் அடிக்கடி சண்டைக்கு வருவார். நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது என்னிடம் உங்களுக்கு அடுத்த ஷுட்டிங் எங்கு என கேட்டார், அதற்கு நான், “ஜேர்மனி” என்றேன்.
அவர், “ உனக்கு மட்டும் எப்படி ஜேர்மனி, லண்டன் என ஷுட்டிங் செய்கிறாங்க.. எனக்கு மட்டும் கிராமங்களில் எடுக்கிறாங்க என்றார். அதற்கு நான்,“ என்னை போல் கிளாமர் ஆடைகளை அணிந்தால் உங்களையும் அப்படி அழைத்து செல்வார்கள்..” என்றேன்.
இதனை தொடர்ந்து, “தேவயானி ஒரு ஆண்டுக்கு 14 படங்களில் கமிட்டாகி நடிப்பார். 20 நாட்களில் அடுத்த படத்திற்கு சென்று விடுவார். இது குறித்து கேட்ட போது, “ என்னை போல் கிராமத்து பெண்கள் போல் கலாச்சார உடையில் நடித்தால் உங்களுக்கும் அடுத்தடுத்து வாய்ப்பு வரும்..” என நேரம் பார்த்து கலாய்த்தார்..” என புன்னகையுடன் பகிர்ந்துள்ளார்.
இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |