ஈழத்தமிழர் வைத்த இரவு பார்ட்டி ! பிரபுதேவாவின் 2 ஆவது மனைவியுடன் ரம்பாவின் குடும்பம்...லீக்கான புகைப்படம்
நடன புயல் பிரபுதேவா தனது இரண்டாவது மனைவியுடன் தொழிலதிபர் இந்திரன் வைத்த இரவு பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார்.
நடிகை ரம்பா ஈழத்தமிழரான தொழிலதிபர் இந்திரன் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் அவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர் என்பதும் தெரிந்ததே.
மேலும் நடிகை ரம்பா திருமணத்திற்கு பின்னர் கனடாவில் செட்டிலாகிவிட்டார் என்பதும் தெரிந்ததே.
சமீபத்தில் இந்தியா வந்த ரம்பா தன்னுடன் நடித்த திரை நட்சத்திரங்களை சந்தித்து வருகிறார்.
பிரபுதேவாவுக்கு பார்ட்டி கொடுத்த ரம்பா கணவர்
குஷ்பு, மீனா, சினேகா உள்பட பலரை சந்தித்த ரம்பா தற்போது பிரபுதேவாவையும் சந்தித்து உள்ளார்.
ரம்பாவின் கணவர் நடத்திய பார்ட்டியில் பிரபுதேவா உள்பட பல திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபுதேவா அவரின் மனைவி மற்றும் ரம்பாவின் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தை ரம்பாவின் கணவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து ‘பிரபுதேவா அவர்கள் இந்த பார்ட்டியில் கலந்து கொண்டதற்கு நன்றி என்றும், ஐந்து வருடங்களுக்குப் பின்னர் அவரை பார்க்கின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.




