நான் முரளி சாரை அடித்ததற்கு காரணம் இது தான்! நடிகை ரம்பா ஓபன் டாக்
நடிகை ரம்பா தேசிய கீதம் திரைப்படத்தில் நடித்த போது, நடிகர் முரளியை அடித்தது குறித்து சமீபத்தில் பேட்டியொன்றில் பகிர்ந்த விடயம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
நடிகை ரம்பா
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரம்பா. தனது திரை பயணத்தில் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வந்த ரம்பா, 90களில் ஆரம்பம் முதல் 2000 இறுதி வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.

விஜயவாடாவை பிறப்பிடமாக கொண்ட ரம்பாவின் இயற்பெயர் விஜயலட்சுமி. அழகான வசீகரிக்கும் முகத்தாலும், அவரின் தொடையழகினாலும் தத்துரூபமாக நடிப்பினாலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
தெலுங்கு சினிமா மூலம் திரைத்துறையில் அறிமுகமான ரம்பா, 'உழவன்' என்னும் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார்.

பின்னர் நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளியான 'உள்ளத்தை அள்ளித்தா' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து சுந்தர புருஷன், செங்கோட்டை, விஜபி, அருணாச்சலம், காதலா காதலா உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களுள் உருவராக வலம் வந்தார்.

இதனை தொடர்ந்து, 2010 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கை தமிழரும் தொழிலதிபருமான இந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார், திருமணத்திற்கு பின்னர் கனடாவில் செட்டிலாகிய இவருக்கு இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.
திருமணத்துக்கு பின் சினிமாவுக்கு முழக்கு போட்ட ரம்பா தற்போது சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகின்றார்.

நடிகர் முரளி குறித்து ரம்பா...
இந்நிலையில், இவர் பிரபல ஊடகமொன்றுக்கு வழங்கி பேட்டியில் நடிகர் முரளியை அடித்தது குறித்து பகிர்ந்துள்ள விடயம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
அதாவது, தேசிய கீதம் படத்தில் முரளியுடன் ரம்பா இணைந்து நடிக்கும் போது, ஒரு நாள் படப்பிடிப்புக்கு ரம்பா தயாராகும் போது,ரம்பா தலையில் ஏதோ தூசு இருந்ததை நடிகர் முரளி தட்டிவிட முயற்ச்சித்துள்ளார்.

அதனை கண்ணாடியில் பார்த்த ரம்பா பல்லியை போட்டு தன்னை முரளி பயமுறுத்த முயற்சித்தாக தவறாக புரிந்துக்கொண்டு பயத்தில் அடித்துவிட்டாராம். பின்னர் புரிந்து கொண்டு மன்னிப்பு கேட்டதாக குறித்த பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |