நடிகை ரகுல் ப்ரீத் சிங் திருமணம்.., மாப்பிள்ளை போட்ட கண்டிஷன்
நடிகை ரகுல் ப்ரீத் சிங் திருமணம் நாளை நடக்கவுள்ளது. இந்நிலையில் நடிகை ரகுல் வீட்டில் மாப்பிள்ளை ஜாக்கி போட்ட கண்டிஷன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
நடிகை ரகுல் ப்ரீத் சிங்
ஹிந்தி, தமிழ், தெலுங்கு படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார் ரகுல் ப்ரீத் சிங்.
தமிழில் அருண்விஜய் நடித்த தடையற்க தாக்க படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதன் பிறகு முன்னணி நடிகர்கரான கார்த்தியுடன் இணைந்து தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்திருந்தார்.
தற்போது, சிறிய இடைவேளைக்கு பிறகு தமிழில் சிவகார்த்திகேயனுடன் அயலான் படம் மூலம் என்ட்ரி கொடுத்துள்ளார்.
மேலும் இவர் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இவர் பிரபல பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான ஜாக்கி பக்னானியை காதலித்து வருகிறார்.
இவர்களது திருமணம் நாளை கோவாவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் நடிகை ரகுல் வீட்டில், மாப்பிள்ளை ஜாக்கி தன் கண்டிஷனை சொல்லி சம்மதிக்க வைத்திருக்கிறார்.
என்ன கண்டிஷன்?
திருமணத்தை முடிந்த அளவிற்கு இயற்கை சூழலிலேயே நடத்த வேண்டும் என முடிவு செய்திருக்கிறார்.
அந்தவகையில் சுற்று சூழலை மாசுபடுத்த வேண்டாம் என்கின்ற எண்ணத்தில் டிஜிட்டல் முறையில் அனைவருக்கும் பத்திரிக்கை அனுப்பியுள்ளார்.
அதேபோல், திருமணத்தில் பட்டாசு வெடித்து கொண்டாட தடை விதித்த ஜாக்கி, விழாவில் மரக்கன்றுகளை நட ஏற்பாடு செய்திருக்கிறார்.
திருமணத்திற்கு வரும் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் விதைகள் மற்றும் மரக்கன்றுகளை வழங்க உள்ளார்.
திருமண விருந்தில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் குளுட்டன், சர்க்கரை இல்லாத உணவுகளை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
மேலும், இதில் பாரம்பரியமான உணவுகளையும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் திருமணத்திற்கு ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |