எனது கணவரை இப்படித்தான் கொன்னுட்டாங்க: பிரபல நடிகை ஆவேசம்
பிரபல நடிகையின் கணவர் கடந்த 2019ம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்டநிலையில், அவரது மரணத்திற்கு காரணத்தினை தற்போது கூறியதோடு, மறக்கமுடியாமல் தவித்தும் வருகின்றார்.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் தோள் மீது ராஜா சின்ன ரோஜா படத்தில் ஏறி நின்ற நடிகை ராகவியின் கண்ணீர் கதை தற்போது பலரையும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
சினிமா மட்டுமின்றி சின்னத்திரை சீரியல் நடிகையாகவும் வலம்வந்த இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்குள் அறிமுகமானார்.
8 ஆண்டுகள் காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் நடந்த ராகவி சசிகுமார் திருமணம் 13 ஆண்டுகள் சந்தோஷமாக கடந்த நிலையில், திடீரென அவரது கணவர் கடந்த 2019ம் ஆண்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
வேலை செய்த இடத்தில் கேமிராவை திருடிவிட்டார் என திருட்டு பட்டம் கட்டி என் கணவருக்கு அதிகமான மன அழுத்தம் கொடுத்தே கொன்று விட்டனர்.
ஆனால், அதுகுறித்து என்னிடம் அவர் மனம் விட்டு பேசியிருந்தாலே அந்த பிரச்சனையில் இருந்து அவரை எப்படியாவது மீட்டிருப்பேன். ஆனால், என்னிடம் எதுவுமே சொல்லாமல் வெளியூர் செல்வதாகக் கூறிவிட்டு சென்றார்.
திடீரென அவர் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டார் என்கிற செய்தி வந்ததும் நான் இடிந்தே போய்விட்டேன். என் குழந்தைக்காக என்னை என் அம்மா எவ்வளவோ போராடி தேற்றினார். நிச்சயம் என் கணவர் மரணத்திற்கு காரணமானவர்களை கடவுள் சும்மா விடமாட்டார் என சாபம் விட்டுள்ளார்.
வீடு முழுவதும் கணவரது புகைப்படத்தினை பார்த்த உறவினர்கள் அதனை அகற்ற கூறியும் தான் அகற்றவில்லை என்றும் அவர் எப்போதுமே என்னுடனே இருப்பார் என்று கூறியுள்ளார்.